கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில்வாக்காளர் அட்டையுடன் ஆதார்எண்ணை இணைக்கும் முகாம்


கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில்வாக்காளர் அட்டையுடன் ஆதார்எண்ணை இணைக்கும் முகாம்
x

கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உட்கோட்டம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று(சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் நடக்கிறது.

சிறப்பு முகாம்

இதுகுறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கோவில்பட்டி உட்கோட்டத்திலுள்ள கோவில்பட்டி தொகுதியில் 66.45 சதவீதமும், விளாத்திகுளம் தொகுதியில் 80.34 சதவீதமும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 62. 41 சதவீதமும் நடந்துள்ளது.

வருகிற 31-ந்தேதிக்குள் நூறு சதவீதம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அந்தந்த பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முகாமிட்டு வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இதில் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா

இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து சனிகிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை நூறு சதவீதம் முடிக்க சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும்,என தெரிவித்துள்ளார்.


Next Story