வக்கீல்கள் நாளை முதல் கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு


வக்கீல்கள் நாளை முதல் கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு
x

வக்கீல்கள் நாளை முதல் கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் பார் அசோசியேஷன் அவசர ஆலோசனை கூட்டம் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்யும் அனைத்து மனுக்களும், வழக்கு ஆவணங்களும் ஆன்லைனில் இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது மிக கடினமாக இருப்பதால் வக்கீல்களின் நலன் கருதியும், நீதிமன்ற பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும் இ-பைலிங் உடனடியாக கட்டாயப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இ-பைலிங் தாக்கல் முறையை தற்காலிகமாக நிறுத்தும் வரை நாளை (வியாழக்கிழமை) முதல் அசோசியேஷனை சேர்ந்த வக்கீல்கள் காலவரையற்ற கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story