கீரனூர் அருகே இடி விழுந்து மின்மாற்றி சேதம்


கீரனூர் அருகே இடி விழுந்து மின்மாற்றி சேதம்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:25 AM IST (Updated: 24 Jun 2023 5:55 PM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே இடி விழுந்து மின்மாற்றி சேதம் அடைந்தது.

புதுக்கோட்டை

கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது கீரனூர் அருகே உள்ள குளத்தூர் கடைவீதியில் உள்ள மின் மாற்றியில் இடி விழுந்ததால் மின்மாற்றி சேதம் அடைந்தது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிராமம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதையடுத்து, கீரனூர் கோட்ட மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து மின்வினியோகம் செய்தனர்.


Next Story