தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு


தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு
x

எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எடுத்தவாய்நத்தம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், கலையரசன், கலைச்செல்வி, சாந்தி, ஏ.சுரேஷ், கோவிந்தன், சுதா ஆகிய 7 உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட வேலைகள் முறையாக நடைபெறவில்லை. வேலைக்கு வராமலேயே 80 பேரின் பெயர்களை வருகை புரிந்ததாக பதிவேட்டில் பதிவு செய்கின்றனர். எனவே தேசிய ஊரக வேலை திட்ட வருகை பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும். சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தகவல் பலகையில் குறிப்பிட்டுள்ள வரவு, செலவு கணக்குகள் பொய்யாக உள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்கள் கேள்வி கேட்டபோது பதில் கூறாமல் கூட்டத்தை ஊராட்சி தலைவர் கலைத்து விட்டார். இது சம்பந்தமாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story