எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது, ஆக்கப்பூர்வமானது: முதல் அமைச்சர் டுவீட்


எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது, ஆக்கப்பூர்வமானது: முதல் அமைச்சர் டுவீட்
x
தினத்தந்தி 18 July 2023 4:51 PM GMT (Updated: 18 July 2023 5:48 PM GMT)

எதிர்க்கட்சித் தலைவர்கள் உடனான சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது;

"பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. பிரிவினைவாத அரசியலின் பிடியில் இருந்து நமது தேசத்தின் பன்மைத்துவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இந்தியா (INDIA - Indian National Developmental Inclusive Alliance) என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

தேசியவாதத்தின் முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எதேச்சாதிகாரிகள் இறுதியில் வீழ்வார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது!" இவ்வாறு முதல் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.


Next Story