மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த மே மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசனத்தின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் மாறி மாறி திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த வாரம் வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை டெல்டா மாவட்டங்களிலும் பெய்து வருவதால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை முதல் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.71 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 818 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.


Next Story