மினி வேன் கவிழ்ந்து பெண் பலி


மினி வேன் கவிழ்ந்து பெண் பலி
x
தினத்தந்தி 2 April 2023 7:00 PM GMT (Updated: 2 April 2023 7:00 PM GMT)

நத்தம் அருகே மினி வேன் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள வேம்பார்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சின்னக்கண்ணு (வயது 45). இவர் தனது அக்காள் மகன் பாண்டி என்பவருடன் மினி வேனில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வேம்பார்பட்டி நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்தனர். மினி வேனை பாண்டி ஓட்டினார். நத்தம் அருகே குமரபட்டிபுதூர் பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சின்னக்கண்ணு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பாண்டி காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் சின்னக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story