மோட்டார் சைக்கிள் திருட்டு
திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் ஒருவர் தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் காணாமல் போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரது மோட்டார்சைக்கிளை திருடி சென்றது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து அவர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மர்ம நபர் மோட்டார்சைக்கிளை திருடியபோது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story