மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:47 PM GMT)

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் திருடு போனது.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள நேமூர் கிராமத்தை சேர்ந்தவர் எபினேசர் ஜாக்சன் துரை. இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் எதிரில் நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story