பங்களாப்புதூர் அருகேதோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை


பங்களாப்புதூர் அருகேதோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை
x

பங்களாப்புதூர் அருகே தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்தது.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை பங்களாப்புதூர் அருகே உள்ள எருமை குட்டை அண்ணாநகர் பகுதிக்கு சென்றது. அங்கு ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் கரும்புகளையும் அருகே இருந்த தோட்டத்தில் புகுந்து வாழைகளையும் சேதப்படுத்தியது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்.


Related Tags :
Next Story