பண்ணாரி சோதனைச்சாவடி அருகே கடைக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே கடைக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பண்ணாரி அருகே சோதனை சாவடி பகுதியில் அடிக்கடி யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகளை நிறுத்தி கரும்புகளை தின்று வருகிறது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு காட்டை விட்டு ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் அந்த யானை கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடைக்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்த தண்ணீர் பிடிக்கும் பிளாஸ்டிக் பேரல் மற்றும் நாற்காலிகளை துதிக்கையால் தூக்கி வீசியும், காலால் மிதித்தும் தள்ளியும் சேதப்படுத்தியது. அதன்பின்னர் யானை காட்டு்க்குள் சென்றுவிட்டது.
இதனால் பயந்து அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு் அங்கிருந்து ஓடினார்கள்.
Related Tags :
Next Story