வரட்டுப்பள்ளம் அணை அருகே ரோட்டில் உலா வந்த காட்டு யானை


வரட்டுப்பள்ளம் அணை அருகே  ரோட்டில் உலா வந்த காட்டு யானை
x

வரட்டுப்பள்ளம் அணை அருகே ரோட்டில் காட்டு யானை உலா வந்தது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. இந்த காட்டு யானைகள் அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள ரோட்டை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்வது வாடிக்கையாகி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை வரட்டுப்பள்ளம் அணைக்கு காட்டு யானை ஒன்று வந்தது. பின்னர் அந்த காட்டு யானை தண்ணீர் குடித்துவிட்டு அந்த பகுதியில் சோதனைச்சாவடி அருகே உள்ள ரோட்டில் உலா வந்தது. காட்டு யானையை கண்டதும், அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நின்றுவிட்டன.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் காட்டு யானையை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதும், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.


Related Tags :
Next Story