நீட் தேர்வுக்கு தயாராகஅரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்கே.பி.முனுசாமி வலியுறுத்தல்


நீட் தேர்வுக்கு தயாராகஅரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்கே.பி.முனுசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2023 7:00 PM GMT (Updated: 7 March 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெரியகோட்டப்பள்ளியில் நேற்று அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியால் தான் தோற்றது என்று குற்றம் சாட்டியுள்ளார். அது ஏற்புடையது அல்ல. தவறான கருத்து. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நன்றாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் மூலம் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி அ.தி.மு.க. என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருக்கிறார். தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்கிறேன் என்று சொல்லி மாணவர்களை ஒரு பக்கம் ஏமாற்றி கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்காக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும். அப்படி பயிற்சி அளித்தால் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசுப் பள்ளி மாணவர்களும் வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.


Next Story