ரூ.7½ கோடியில் புதிய பஸ்நிலையம்


ரூ.7½ கோடியில் புதிய பஸ்நிலையம்
x

குமுளியில் ரூ.7½ கோடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையாளர் சித்தார்த்தன், மேலாளர் ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் காஞ்சனா மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தமிழக எல்லையான குமுளியில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.7½ கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 17-வது வார்டு சுள்ளக்கரை ஓடையில் தடுப்பு சுவர் அமைத்தல், 10-வது வார்டு பெத்துகுளத்தில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்பட 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள், தங்கள் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். முடிவில் நகராட்சி வருவாய் அதிகாரி அய்யப்பன் நன்றி கூறினார்.


Next Story