தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி- முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி- முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 May 2022 5:06 AM GMT (Updated: 19 May 2022 6:29 AM GMT)

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்

கோவை,

கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'பொருநை' அகழ்வு ஆராய்ச்சி கண்காட்சி இன்று தொடங்கி வைத்தார் .

கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு வந்தார்.

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார் .கீழடி, கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.- அவினாசியில் நடைபெறும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்

கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கார் மூலமாக ஊட்டிக்கு புறப்படுகிறார்.

ஊட்டி செல்லும் மு.க.ஸ்டாலின் நாளை காலை தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். 21-ந் தேதி ஊட்டி 200-ம் ஆண்டு விழா மற்றும் தமிழக அரசின் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார்.


Next Story