மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 19 May 2022 11:34 AM GMT (Updated: 19 May 2022 11:39 AM GMT)

சிவகங்கை அருகே கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை அருகே கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

28 வண்டிகள்

சிவகங்கை அருகே ஒக்கூர் வெங்கலமுடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஒக்கூர்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 28 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாடு வண்டி பந்தயம், சின்னமாடு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாடு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஒக்கூர்புதூர் கருப்பையா மற்றும் மதகுபட்டி வெள்ளைக்கண்ணு வண்டியும், 2-வது பரிசை தேத்தாம்பட்டி பொன்னுப்பிள்ளை மற்றும் தேடனேரி இருளப்பன் வண்டியும், 3-வது பரிசை தேனி பன்னைபுரம் துளசிராஜன் வண்டியும், 4-வது பரிசை நகரம்பட்டி கண்ணதாசன் வண்டியும் பெற்றது.

பரிசு

பின்னர் நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 18வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும், 2-வது பரிசை வானக்கருப்பு செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை நெற்புகப்பட்டி சிங்காரம் வண்டியும், 4-வது பரிசை உலகுபிச்சான்பட்டி ரமேஷ்ராஜா மற்றும் மதகுபட்டி ஆண்டிக்காளை வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story