சத்தான உணவு விநியோகம்; தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் 7 ரெயில் நிலையங்களுக்கு விருது


சத்தான உணவு விநியோகம்; தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் 7 ரெயில் நிலையங்களுக்கு விருது
x

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் ரெயில் நிலையங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை,

பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்குவதில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றும் ரெயில் நிலையங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் 7 ரெயில் நிலையங்களுக்கு 'ஈட் ரைட் ஸ்டேஷன்' (Eat Right Station) என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர், கும்பகோணம் ஆகிய ரெயில் நிலையங்கள் மற்றும் மண்டல ரெயில்வே பயிற்சி நிறுவனம் ஆகிய 7 இடங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


1 More update

Next Story