முதியவருக்கு 20 ஆண்டு சிறை


முதியவருக்கு 20 ஆண்டு சிறை
x

முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலூர்

பாலியல் தொந்தரவு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள அரங்கோட்டையை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 81). இவர் கடந்த 18.8.2022 அன்று வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 15 வயதுடைய பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து மாணவியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சுந்தரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் ேபாலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கர்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றவாளியான சுந்தரத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுந்தரத்தை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story