வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் சோலார் மின்மோட்டார் வழங்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை


வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் சோலார் மின்மோட்டார் வழங்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் சோலார் மின்மோட்டார் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கின் மேற்கு பகுதியான ஏகலூத்து, புதுக்குளம், மணிகட்டி ஆலமரம் மற்றும் கம்பம்மெட்டு மழை அடிவாரப்பகுதியை ஒட்டி பல ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மழையை நம்பி கம்பு, சோளம், எள், தட்டைப்பயிறு, மொச்சை, சூரிய காந்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாததால் மானாவாரி விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் வறட்சியை தாங்கி வளரக்கூடிய கொட்டை முந்திரியை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். சில இடங்களில் விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து ஜெனரேட்டர் மூலம் மோட்டார்களை இயக்கி தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதில் டீசல் செலவு அதிகமாவதால் ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பிற்காக காத்திருக்கின்றனர். எனவே மின்சாரத்திற்கு மாற்றாக வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் சோலார் மின்மோட்டார் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story