வரலட்சுமி விரதத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு


வரலட்சுமி விரதத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:45 PM GMT)

வரலட்சுமி விரதத்தையொட்டி நேற்று போடி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

வரலட்சுமி விரதத்தையொட்டிநேற்று, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பத்மாவதி தாயாருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சுவாமிக்கு 50,0001 வளையல்களால் ஆன சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டியும், திருமணமாகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் வழிபட்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி மகாலட்சுமி மற்றும் சப்த கன்னிமார்களுக்கு மல்லிகைப்பூ, தாமரை பூ உள்ளிட்ட பல்வேறு மலர்கள், திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் கலந்துகொண்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் தாலி கயிறு, வளையல் மற்றும் இனிப்புகள் வழங்கபட்டன. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோவிலிலும் வரலட்சுமி விரதத்தையொட்டி பிரசன்ன நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.


Related Tags :
Next Story