தர்மபுரி அன்னை சத்யா நகரில்ரூ.72¼ லட்சத்தில் நகராட்சி பசுமை பூங்காஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்


தினத்தந்தி 5 March 2023 7:00 PM GMT (Updated: 5 March 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி அன்னை சத்யா நகரில் ரூ.72¼ லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி பசுமை பூங்காவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

நகராட்சி பசுமை பூங்கா

தர்மபுரி நகராட்சி 13-வது வார்டில் உள்ள அன்னை சத்யா நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சத்து 25 ஆயிரம் லட்சம் மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களுக்கான நடைப்பயிற்சி பாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், செடிகள், மின்விளக்குகள், குடிநீர் மற்றும் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்ட பசுமை பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது.

கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் வெங்கடேஸ்வரன், ஜி.கே.மணி, தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பசுமை பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பஸ் நிலையங்கள் புனரமைப்பு

இதனைத் தொடர்ந்து தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

இதில தர்மபுரி உதவி கலெக்டர் கீதா ராணி, நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், நகராட்சி உதவி பொறியாளர் சரவணகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் சத்யா முல்லைவேந்தன், சுருளிராஜன், மாதேஸ்வரன், புவனேஸ்வரன், பாண்டியன், முருகவேல், சமயாராஜா, விஜயலட்சுமி உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நகராட்சி பசுமை பூங்கா திறப்பு

தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தீர்க்கும் வகையில் வாரந்தோறும் வார்டு கட்டுரை பிரசுரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் திங்கட்கிழமை வெளியான நாளிதழில் 13-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி பசுமை பூங்காவை உடனே திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் தொடர்ச்சியாக நகராட்சி பசுமை பூங்கா உடனடியாக திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பசுமை பூங்காவை திறந்து வைத்தார். `தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நகராட்சி பூங்கா திறக்கப்பட்டதை பொதுமக்கள் பாராட்டினர். இதற்கு உறுதுணையாக இருந்த `தினத்தந்திக்கு' பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.


Next Story