"வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்" - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 Dec 2023 9:46 AM GMT (Updated: 7 Dec 2023 12:14 PM GMT)

புயல் வெள்ள பாதிப்பு சேத விவரங்கள் குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் முதல்-அமைச்சர் எடுத்துரைத்தார்.

சென்னை,

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது புயல் வெள்ள பாதிப்பு சேத விவரங்கள் குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் முதல்-அமைச்சர் எடுத்துரைத்தார். பின்னர், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது;

"சென்னையில் இயல்புநிலை திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முதல்கட்டமாக ரூ.450 கோடி வழங்கிய பிரதமருக்கு நன்றி. புயல் நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ.5,060 கோடி கேட்டுள்ளோம். மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரத்தொடங்கி உள்ளனர்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story