பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா


பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:45 PM GMT)

சங்கரன்கோவிலில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவிலில் பா.ஜனதா சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது. நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி, பொருளாளர் பாலகிருஷ்ணன், நகர மகளிர் அணி தலைவி மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். நகர பொருளாளர் மணிகண்டன், வர்த்தக அணி துணைத்தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் கோவிலில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பா.ஜ.க. மாவட்டச் செயலாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள சென்னிகுளத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மாவட்ட பார்வையாளர் மகாராஜன், பொதுச்செயலாளர் பாலகுருநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story