ஆரப்பாளையம், வடுகப்பட்டி பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக ஆரப்பாளையம், வடுகப்பட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணி காரணமாக ஆரப்பாளையம், வடுகப்பட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஆரப்பாளையம்
வில்லாபுரம் பகுதிகளில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி ஏ.பி.கே. மெயின்ரோட்டில் நந்தவனம், ஜெயவிலாஸ் பாலம் முதல் வெற்றி திரையரங்கம் வரை, டி.என்.எச்.பி. சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். தெரு, அகஸ்தியர் தெரு, கதிர்வேல் தெரு, மயான ரோடு, காளியம்மன் கோவில் தெரு, கணக்கு பிள்ளை தெரு, அம்மச்சியார் அம்மன் தெரு, மகாலிங்கம் சாலை மற்றும் நல்லதம்பி தோப்பு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மேலும் வில்லாபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட இந்திராநகர், திருமால்நகர், பாண்டியன்நகர், கரிசல்குளம், ராம்முனிநகர் 1-3 வரை, யோகேந்திராநகர், பெரியார் நகர், ஐ.ஓ.சி.நகர், கோவில்பாப்பாகுடி மெயின்ரோடு, அய்யனார் கோவில் பகுதிகளில் மின்நிறுத்தம் ஏற்படும். அதேபோல் பொன்னகரம் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளான ஏ.ஏ.மெயின்ரோடு, மேலபொன்னகரம் 2 முதல் 8 வரை தெருக்கள், ஆர்.வி.நகர் 1 முதல் 4 வரை உள்ள தெருக்கள், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, ஆரப்பாளையம் மற்றும் அதைசுற்றி உள்ள பகுதிகள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, கைலாசபுரம், அசோக்நகர், அருள்தாஸ்புரம், களத்துபொட்டல், பெரியசாமி கோனார் தெரு, தத்தனேரி மெயின்ரோடு முதல் தத்தனேரி மைதானம் வரை, பாரதிநகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.
வடுகப்பட்டி
சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட ஆனையூர் துணை மின் நிலையத்தில் பூதகுடி பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே சிக்கந்தர் சாவடி, பி.ஆர்.சி. காலனி, பாசிங்காபுரம், வாகைகுளம், பூதங்குடி, விஷால் நகர், இ.எம்.டி.நகர், குமாரம், வடுகபட்டி, அரியூர், கோவில்பாப்பாகுடி, கீழ நெடுங்குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.