மரம் வளர்ப்பு குறித்த பிரசார நிகழ்ச்சி


மரம் வளர்ப்பு குறித்த பிரசார நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 Sep 2022 7:00 PM GMT (Updated: 19 Sep 2022 7:00 PM GMT)

மரம் வளர்ப்பு குறித்த பிரசார நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரியில் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் மரம் வளர்ப்பு குறித்த தேசிய பிரசார நிகழ்ச்சி வேளாண்மை அறிவியல் மையத்தில் நடந்தது. மாவட்ட வேளாண்மை துணைஇயக்குனர் (மாநில திட்டம்) மனோகரன் தலைமை தாங்கினார். வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாடி தோட்டம் அமைப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், குழந்தை திருமண தடுப்பு முறைகள் மற்றும் மாவட்ட சமூக நலத்துறையின் திட்டங்கள் பற்றியும் விளக்கி கூறினார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மாலினி (காவேரிப்பட்டணம்), பத்மாவதி (பர்கூர்) ஆகியோர் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

அங்கன்வாடி அலுவலர்கள், விவசாயிகளுக்கு ஐ.எப்.எப்.சி.ஓ. நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள், காய்கறி தோட்ட விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுனர்கள் பூமதி, உதயன் ஆகியோர் மனித ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து தானியங்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். தொழில் நுட்ப வல்லுனர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Next Story