அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்


அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

கெடாரில் தி மு க சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காணை தெற்கு, வடக்கு ஒன்றியம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கெடாரில் நடைபெற்றது. இதற்கு காணை தெற்கு ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெய.ரவிதுரை, விக்கிரவாண்டி பேரூர் செயலாளர் நைனாமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் சுபா.சந்திரசேகர், நளினி சாரங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர் வீரராகவன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாற்றுக்கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் பொன்முடி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.


Next Story