புதுக்கோட்டை விபத்து; கனரக வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்


புதுக்கோட்டை விபத்து; கனரக வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
x

கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை,

அரியலூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, நந்தனசமுத்திரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததுடன், அதன் அருகில் இருந்த வேன் மற்றும் கார் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், வேன் மற்றும் காரில் இருந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 19 ஐயப்ப பக்தர்கள் படுகாயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு கனரக வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும் எனவும், அந்த வாகனங்களின் போக்குவரத்திற்கு மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.



Next Story