புதுக்கோட்டை: முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்த கால் நடும் விழா - திரளான மக்கள் பங்கேற்பு
காளை வளர்ப்போர் தங்கள் காளைகளுக்கு பயிற்சிகள் அளித்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று முகூர்த்த கால் நட்டு சிறப்பித்தனர்.
கந்தர்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காளை வளர்ப்போர், தங்கள் காளைகளுக்கு வாடிவாசல் அமைத்து சீறிப்பாய வைத்தும், குளத்தில் நீச்சல் அடிக்க பயிற்சிகள் அளித்தும் தயார் நிலையில் வைத்துள்ளனர். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி இருமுறை மாற்றப்பட்ட நிலையில், இந்த முறை ஜனவரி 2-ந்தேதி குறித்த நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என விழா குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story