நீட் தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தது


நீட் தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தது
x

நீட் தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தது என்று மதுரை மாணவ-மாணவிகள் கூறினார்கள்.

மதுரை

நீட் தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தது என்று மதுரை மாணவ-மாணவிகள் கூறினார்கள்.

வினாக்கள் கடினம்

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 8 ஆயிரத்து 130 பேர் எழுதினார்கள். 723 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை. மதுரையிலும் நீட் தேர்வு எழுதும் முன் மாணவ-மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த மோதிரம், தங்கச்சங்கிலி, கம்மல், வாட்ச் உள்ளிட்ட பொருட்களை தேர்வறைக்கு முன்பாக கழற்றி பெற்றோரிடம் கொடுத்தனர். மாணவ-மாணவிகளின் ஆதார், ஹால்டிக்கெட், கைரேைக பதிவு செய்த பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வு எழுதிய மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ராஜா கூறும் போது:-

முதல் முறையாக நீட் தேர்வு எழுதியிருக்கிறேன். முதல் முறை என்பதால் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. கடைசி காலத்தில் தான் படிக்க தொடங்கினேன். அதனால், தேர்வு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. குறிப்பாக வேதியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது. எந்த ஒரு தேர்வுக்கும் அச்சப்படக்கூடாது. தேர்வினை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்து என்றார்.

நல்ல மதிப்பெண்கள்

சிந்தாமணியை சேர்ந்த மாணவி சுவேதா ராஜன் கூறும் போது:-

நானும் முதல் முறையாகத்தான் தேர்வு எழுதுகிறேன். நான் என்ன நினைத்து தேர்வுக்கு சென்றனோ அதுபோல் தேர்வும் எளிமையாக இருந்தது. பயாலஜி, வேதியியல், இயற்பியல் என எல்லா பாடத்தில் இருந்தும் கேட்டகப்பட்ட கேள்விகளும் எளிது தான். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும்போதிருந்தே நீட் தேர்வுக்கும் என்னை தயார்படுத்திக்கொண்டேன் என்றார்.

ஆனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் தங்களுக்கு வினாக்கள் கடினமாக இருந்தது என கூறினர்.


Related Tags :
Next Story