குதிரை, மாட்டு வண்டி பந்தயம்


குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
x

கோவில் திருவிழாவையொட்டி குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

காளையார்கோவில்,

கோவில் திருவிழாவையொட்டி குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

புரவி எடுப்பு விழா

காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட குளக் கட்டப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீவில்லுடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. குளக்கட்டப்பட்டி-நாட்டரசன்கோட்டை சாலையில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 26 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், பெரிய குதிரை வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை மேலூர் அழகன்கவுசிக் மற்றும் திருவாதவூர் எஸ்.எம்.பிரதர்ஸ் வண்டியும், 3-வது பரிசை வெள்ளநாயக்கன்பட்டி சீமான் மற்றும் நொண்டி கோவில்பட்டி விஸ்வாமித்திரன் வண்டியும் பெற்றன.

பரிசு

பின்னர் நடைபெற்ற பெரியகுதிரை வண்டி பந்தயத்தில் 17 குதிரை வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தஞ்சாவூர் பிரபுசங்கர் வண்டியும், 2-வது பரிசை சேலம் மாவட்டம் மாத்தூர் மகாலெட்சுமி வண்டியும், 3- வது பரிசை திருவா தவூர் கொரடர்சேரி குண்டி ஆண்டவர் வண்டியும், 4- வது பரிசை அறந்தாங்கி மைதீன்பாய், 5-வது செவல்கண்மாய் ராமலிங்கம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story