கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x

கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை

கல்லல்,

கல்லல் அருகே பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் பாகனேரி-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 34 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாடு வண்டி பந்தயம், சின்னமாடு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாடு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கல்லல் அழகுசுகன்யா மற்றும் தேனி மாவட்டம் ஊத்துப்பட்டி பிரபு வண்டியும், 2-வது பரிசை பி.நெற்புகப்பட்டி சதீஷ்குமார் மற்றும் பீர்க்கலைக்காடு பைசல் வண்டியும், 3-வது பரிசை துவரங்காடு முத்தையா பாலகிருஷ்ணன் வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற நடுமாடு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மதகுபட்டி கணேஷ்போர்வெல்ஸ் மற்றும் ஆலவிளாம்பட்டி முத்துலெட்சுமி வண்டியும், 2-வது பரிசை தேனிமாவட்டம் பண்ணைபுரம் சோஸ்னா மற்றும் தேவாரம் தினேஷ் வண்டியும், 3-வது பரிசை பாகனேரி ராமநாதன் வண்டியும் பெற்றன. இறுதியாக நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பாகனேரி குருவிஜய் பிரதர்ஸ் வண்டியும், 2-வது பரிசை வெள்ளலூர் நிரஞ்சன் வண்டியும், 3-வது பரிசை சிங்கம்புணரி ஆஷிகா வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story