மாட்டுவண்டி பந்தயம்
மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே எஸ்.எம்.இலந்தைக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு, பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 24 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை ஏனாதி கிராமத்தை சேர்ந்த ஏ.டி.எம். என்பவரது மாடு வென்றது. 2-வது பரிசு இலந்தைகுளம் வீர முனியசாமி சக்கரபாணி என்பவரது மாடு பெற்றது.3-வது பரிசை எம்.கரிசல்குளம் ராம்ஜி என்பவரது மாடு பெற்றது. ஆறுதல் பரிசை செல்லப்பாண்டி என்பவரது மாடு பெற்றது. இதேபோல் சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசை சாயல்குடி சேர்ந்த சுந்தரம் என்பவரது மாடு பெற்றது. 2-வது பரிசை ஆப்பனூர் வேடாங் கூட்டம் வண்டு முருகன் என்பவரது மாடு பெற்றது. 3-வது பரிசை பரவை கிராமத்தை சேர்ந்த சின்ன வேலம்மாள் ராஜலிங்கம் என்பவரது மாடு பெற்றது. ஆறுதல் பரிசை ஏனாதி ஏ.டி.எம். என்பவரது மாடு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.