ராமநாதபுரம்: வாலிநோக்கம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரம் - வீடியோ...!


x

ராமநாதபுரத்தில் வாலிநோக்கம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் விளங்கி வந்தாலும் அதற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் அதிகமாகவே நடந்து வருகின்றது. குறிப்பாக சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் மட்டும் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பள பாத்திகள் உள்ளன.

இந்த நிலையில் இந்த ஆண்டின் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் வாலிநோக்கம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் உப்பளங்களில் கல் உப்பு விளைச்சல் அதிகமாக உள்ளது.

இந்த கல் உப்புகள் லாரியில் ஏற்றப்பட்டு ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மருந்து மாத்திரை மற்றும் ரசாயன பொருட்கள் தயாரிப்பதற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர பெரிய பெரிய ஹோட்டல்களுக்கும் உணவுக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன. உப்பு விளைச்சல் அதிகமாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் ஒரு டன் உப்பு 4 ஆயிரத்திற்கும் மேல் விலை போவதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story