குளோரின் விஷவாயு கசிவு ஏற்பட்டால் பாதுகாப்பது குறித்து ஒத்திகை பயிற்சி


குளோரின் விஷவாயு கசிவு ஏற்பட்டால் பாதுகாப்பது குறித்து ஒத்திகை பயிற்சி
x

குளோரின் விஷவாயு கசிவு ஏற்பட்டால் பாதுகாப்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடந்தது.

கரூர்

கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலையில் குளோரின் விஷவாயு கசிவு ஏற்பட்டால் காகித ஆலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் இணைந்து ஒத்திகை நடத்தினர்.

அப்போது ஒரு லாரியில் குளோரின் கியாஸ் 900 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு காகித ஆலைக்குள் வரும் போது, அங்கிருந்த புளிய மரத்தில் லாரி மோதி கியாஸ் வெளியேறியது போன்றும், அதனை அங்கிருந்த தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டிருந்தபோது 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதுபோல் நடித்து காட்டினர். பின்னர் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு வந்து பாதிக்கப்பட்ட 3 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் கியாசின் வீரியத்தை குறைப்பது போன்று நடித்து காட்டினர். இதில் தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டோ வைத்தியலிங்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ், கரூர் கோட்டாச்சியர் ரூபினா, புகழூர் தாசில்தார் மோகன்ராஜ், புகழூர் நகராட்சி ஆணையர் கனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story