விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்க: எடப்பாடி பழனிசாமி


விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்க: எடப்பாடி பழனிசாமி
x

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

செய்யாறு விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எந்தவித முன்வழக்குகளும் இல்லாத நிலையில், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குண்டர் சட்டத்தை ரத்துசெய்யாவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story