விவசாயிகளுக்கு விதை பண்ணை பயிற்சி


விவசாயிகளுக்கு விதை பண்ணை பயிற்சி
x

விவசாயிகளுக்கு விதை பண்ணை பயிற்சி நடந்தது.

ராணிப்பேட்டை

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பரதராமி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் விவசாயிகளுக்கு தரமான விதை பண்ணை அமைப்பதற்கான பயிற்சி நடந்தது. அட்மா வட்டார தொழில்நுட்ப வேளாண்மை மேலாளர் சசிகலா தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் திலகவதி பண்ணை முகாமை ெதாடங்கி வைத்து கூட்டுப்பண்ணை குழு, உழவர் உற்பத்தி பண்ணை குழு, விதை தேர்வு செய்தல் ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.

மேலும் வேளாண்மை அலுவலர் லதா விதை சான்று, விதைப்பண்ணை எவ்வாறு பதிவு செய்வது, பதிவு செய்யும் முறை, அதில் கலப்பு நீக்குதல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்த பயிர் பராமரிப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

அட்மா திட்ட அலுவலர் உதயகுமார் மற்றும் பிரபாகரன், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விதைப்பண்ணை பற்றி பயிற்சி எடுத்தனர்.


Next Story