கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா விற்ற  2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கடமலைக்குண்டு அருகே கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தேனி

கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55). அவருடைய மகள் சத்யா (39). மகன் ஜெயசூர்யா (28). அதே ஊரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தரபாண்டி (23). கடந்த மாதம் 19-ந்தேதி இவர்கள் 4 பேரையும் கஞ்சா விற்றதாக கடமலைக்குண்டு போலீசார் கைது செய்து தேக்கடி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ெஜயசூர்யா, சுந்தரபாண்டி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டாா். இதையடுத்து 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story