பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள்


பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள்
x

விருத்தாசலம் அருகே பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு கண்டனர்.

கடலூர்

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையை சேர்ந்த 78 வயது முதியவர் ஹலோ சீனியர் 8220009557 என்ற காவல் உதவி எண்ணில், சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு தனது 2 மகன்கள் தனக்கும், தனது மனைவிக்கும் சாப்பாடு தராமல் வீட்டை விட்டு துரத்தி பிரச்சினை செய்து வருவதாக புகார் தெரிவித்தார். இதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், இது பற்றி விசாரிக்க மங்கலம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவரது 2 மகன்களும் மாதந்தோறும் தலா ரூ.2500 தனது தந்தைக்கு கொடுத்து, 2 பேருக்கும் சாப்பாடு கொடுத்து நல்ல முறையில் பார்த்து கொள்வதாக எழுதி கொடுத்தனர். இதன் மூலம் இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டது.


Next Story