ஆலையில் ரேஷன் அரிசியை அரைத்தால் கடும் நடவடிக்கை


ஆலையில் ரேஷன் அரிசியை அரைத்தால் கடும் நடவடிக்கை
x

ஆலையில் ரேஷன் அரிசியை அரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

திருச்சி

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஐ.ஜி. காமினி உத்தரவின்படி தமிழக அரசால் தமிழக மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அடங்கிய குழு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி திருச்சி நகரம் மற்றும் மண்ணச்சநல்லூர், துறையூர், புலிவலம் ஆகிய இடங்களில் உள்ள சிறிய அளவில் செயல்படும் அரிசி ஆலையில் திடீர் சோதனை செய்தனர். அங்கு ஏதேனும் குற்ற செயல்கள் நடைபெறுகிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் ரேஷன் அரிசியை சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அதனை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்றும், அரிசி ஆலையில் வியாபார நோக்கத்திற்காக ரேஷன் அரிசியை அரைப்பது மற்றும் அதற்கான நோக்கத்தில் அதிகளவில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என அனைத்து அரிசி ஆலைகளுக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story