பொங்கல் பண்டிகை தினங்களில் மதுபோதையில் பிரச்சினை செய்தால் கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


பொங்கல் பண்டிகை தினங்களில் மதுபோதையில் பிரச்சினை செய்தால் கடும் நடவடிக்கை:  போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x

பொங்கல் பண்டிகை தினங்களில் மதுபோதையில் பிரச்சினை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்க விடுத்துள்ளார்.

கரூர்

13 பேர் கைது

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை எந்த இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்கு ஏற்றவாறு மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் பிரச்சினை செய்யக்கூடிய நபர்கள் ஆகியோரை முன்கூட்டியே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பேரில் இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 ேபர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

கடும் நடவடிக்கை

கரூர் மாவட்டம் முழுவதும் குற்றவாளிகள் மற்றும் பிரச்சினைக்குரிய நபர்களின் 34 நபர்களின் வீடுகளில் இதுவரை போலீசார் சோதனை செய்துள்ளனர். மேலும் ஜாதி ரீதியாக பிரச்சினைக்குரிய இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை தினங்களில் மதுபோதையில் பிரச்சினையில் ஈடுபடவோ, வாகனங்களில் அதிவேகமாக பயமுறுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவா் கூறப்பட்டுள்ளது.


Next Story