ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்புதூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்புதூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 23 நாட்கள் சம்பள பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் தூய்மை பணியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பளம் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதையடுத்து சம்பள பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பணிகளில் ஈடுபடாமல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story