திருத்தணியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருத்தணியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருத்தணியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கரும்பை அரவைக்காக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு கரும்புவிவசாயிகள் சங்கம் சார்பில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலை மட்ட பொருளாளர் பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் திருத்தணி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துளசி நாராயணன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.161 மட்டுமே ஏற்றியுள்ளது. உரம் விலை உயர்வு, கரும்பு வெட்டுக் கூலி உயர்வு, உற்பத்தி விலை உயர்வு காரணமாக கரும்பு விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை தலைமை தபால் அலுவலக அதிகாரியிடம் மனுவாக கொடுக்கப்பட்டது.


Next Story