கரூரில், இரவு நேர ரோந்து பணியினை போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
கரூரில், இரவு நேர ரோந்து பணியினை போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் வாகன சோதனைகள் மற்றும் இரவு ரோந்து பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கரூர் நகர பகுதியில் வாகன சோதனை செய்தபோது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களின் லைசென்ஸ், ஆர்சி புக் ஆகியவை முறையாக வைத்துள்ளனரா என்று ஆய்வு செய்தும், முறையாக ஆவணங்கள் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இரவு நேர ரோந்து போலீசாரின் பணிகளை பார்வையிட்டு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்பு ரோந்து பணியில் இருக்கும் போலீசார்களுக்கு குற்ற தடுப்பு அறிவுரைகளை வழங்கினார். அதன் பின்னர் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலைய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், நிலைய பாரா அலுவலில் இருக்கும் போலீசார் விழிப்புணர்வுடன் செயல்பட அறிவுரைகள் வழங்கியும், நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள ரோந்து வாகனங்களை தணிக்கை செய்து நெடுஞ்சாலைகளில் குற்ற தடுப்பு மற்றும் வாகன விபத்து நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவுரைகள் வழங்கினார்.