கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலுக்கு தமிழக அரசு உதவும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்துக்கு தமிழக அரசு உதவும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்லனர். எங்கு பார்த்தாலும் வெள்ளாகாடாக காட்சி அளிக்கின்றன.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் மழையில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்லுக்கு தமிழக அரசு உதவும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது;
"இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் பருவ மழையின் பேரழிவு தாக்கம் கவலையளிக்கிறது. இமாச்சல பிரதேசத்திற்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும். இமாச்சல பிரதேச சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.