"ஆந்திராவில் கஞ்சாவை அழிக்க காரணம் தமிழக போலீஸ்" - அமைச்சர் மா. சுப்ரமணியன்
ஆந்திர அரசின் அதிரடியான அந்த முடிவினால் 6,416 ஏக்கரில் இருந்த கஞ்சா செடிகள் ஒழிக்கப்பட்டன என அவர் தெரிவித்தார்.
சென்னை,
தமிழக போலீஸ்துறையின் நடவடிக்கையால் ஆந்திராவில் சுமார் 4,000 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் போதையை தவிர்ப்போம், போதையை தடுப்போம் என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
ஆந்திர அரசு அதிரடியாக முடிவெடுத்து கடந்த அக்டோபர் திங்கள் 30-ந் தேதி 6,416 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அவர்கள் 'ஆபரேஷன் பர்வதன்' என்ற திட்டத்தின் மூலம் 36 நாட்கள் தொடர்ச்சியாக அழித்தனர்.
ஆந்திர அரசின் அதிரடியான அந்த முடிவினால் 6,416 ஏக்கரில் இருந்த கஞ்சா செடிகள் ஒழிக்கப்பட்டன. அந்த கஞ்சா செடிகளிம் மதிப்பு சுமார் ரூ. 4,000 கோடி ஆகும். அந்த ரூ. 4,000 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகளை அழித்து ஒழிப்பதற்கு காரணமாக தமிழகத்தை சேர்ந்த போலீஸ் ஏ.டி.ஜி.பி ( கிரைம் ) இருந்துள்ளார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.