தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு


தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு
x
தினத்தந்தி 3 July 2022 7:00 PM GMT (Updated: 4 July 2022 7:03 AM GMT)

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது.

நாமக்கல்

பள்ளிபாளையம்:-

பள்ளிபாளையத்தில் மாவட்ட பொன்னி சர்க்கரை ஆலையின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு நேற்று நடந்தது. முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இதையடுத்து சங்க தலைவராக முத்துசாமி, செயலாளராக நல்லாக்கவுண்டர், பொருளாளர் பழனிசாமி உள்பட 25 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ஒரு டன் கரும்புக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.5,000 விலை வழங்க வேண்டும். வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு மாநில அரசு கரும்புக்கு பரிந்துரை விலையை எஸ்.ஏ.பி. அறிவித்து வழங்கிட வேண்டும். முத்தரப்பு கூட்டம் நடத்தி வெட்டுக்கூலியை முறைப்படுத்த வேண்டும். வெட்டுக்கூலியில் 50 சதவீதத்தை சர்க்கரை ஆலை ஏற்றுக்கொள்ள வேண்டும். 2016-2017-ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு தரவேண்டிய எஸ்.ஏ.பி. பாக்கி ரூ.70 கோடியை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.


Next Story