நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் 5 காலிப்பணியிடங்களுக்கு 5,344 பேர் விண்ணப்பம் நேர்முக தேர்வு தொடங்கியது


நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில்  5 காலிப்பணியிடங்களுக்கு 5,344 பேர் விண்ணப்பம்  நேர்முக தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 10 Oct 2022 6:45 PM GMT (Updated: 10 Oct 2022 6:45 PM GMT)

நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் 5 காலிப்பணியிடங்களுக்கு 5,344 பேர் விண்ணப்பம் நேர்முக தேர்வு தொடங்கியது

நாமக்கல்

நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் காலியாக உள்ள 5 பணியிடங்களுக்கு 5,344 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு நேற்று தொடங்கியது.

5 காலிப்பணியிடங்கள்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் காலியாக உள்ள உதவி சுயம்பாகம் (உள்துறை) பணியிடங்கள் 2, இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் டிக்கெட் பஞ்சர் பணியிடங்கள் தலா ஒன்று என மொத்தம் 5 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதை தொடர்ந்து முதற்கட்டமாக தட்டச்சர் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் கோவில் உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் நடந்தது. இதில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சாமிநாதன், கோவில் கண்காணிப்பாளர் மணிமாலா, ஆய்வர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு நேர்முக தேர்வை நடத்தினர்.

5,344 பேர் விண்ணப்பம்

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- காலியாக உள்ள 5 பணியிடங்களுக்கு 5,344 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். குறிப்பாக ஒரு தட்டச்சர் பணிக்கு மட்டும் 300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு தினசரி 60 பேர் வீதம் 5 நாட்கள் நேர்காணல் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதை தொடர்ந்து இதர காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story