அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைத்து தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
அதிமுக தொண்டர்களால் கழக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களாலும், பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவை அறிவித்து விட்டார்கள். அந்த தருணத்தில் இருந்து நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story