பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது


பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
x

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் அருகே தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர்

ஆம்பூர்

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் அருகே தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பாலாற்றில் மீண்டும் வெள்ளம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது மாதனூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவிரி கூட்டுக் குடிநீர் பைப் லைன் சேதமடைந்தது. மாதனூர் பாலாற்று தரைப்பாலம் 2 துண்டாக உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மாதனூரில் இருந்து குடியாத்தம் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ளி, வளத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளம் நின்றதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக மற்றும் ஆந்திர எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாறு, நரியம்பட்டு வழியாக வரும் கொட்டாறு ஆகிய ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாலம் அடித்து செல்லப்பட்டது

இந்த வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த தற்காலிக தரைப்பாலம் இரண்டாக உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மாதனூரிலிருந்து குடியாத்தம் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு சொல்ல வேண்டும் என்றால் பள்ளிகொண்டா அல்லது பேரணம்பட்டு சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் சென்று, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லோகநாதன், ஆம்பூர் தாசில்தார் பழனி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

---

Image1 File Name : 10682391.jpg

---

Image2 File Name : 10682392.jpg

----

Reporter : P. HARIYANTHRAJ Location : Vellore - Ambur


Related Tags :
Next Story