ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்
ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்
புத்தூர் முதல் கீழ்வேளூர் வரை ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜல்லி கற்கள்
நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேளாங்கண்ணி, நாகை, நாகூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல செல்லலாம். இந்த சாலை வழியாக தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், சுற்றுலா வருபவர்கள் சென்று வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் புத்தூர், மஞ்சக்கொல்லை, பொரவச்சேரி, சிக்கல், சிக்கவலம், ஆழியூர், கீழ்வேளூர் வரை சமீபத்தில் பெய்த கன மழையால் தார்சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. மேலும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு காணப்படுகிறது.
சீரமைக்க வேண்டும்
இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் முதல் கீழ்வேளூர் வரை ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.